1. Home
  2. தமிழ்நாடு

சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி ? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

1

சிதம்பரம் தொகுதி தமிழ்நாட்டில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட களேபரம் காரணமாக இந்த முறை அந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.சிதம்பரம் தொகுதியில் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொல் திருமாவளவன் மீண்டும் களமிறங்கி உள்ளார். திமுக கூட்டணி சார்பாக இவர் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் உயர் நீதிமன்றம் வரை சென்று பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது.
இங்கே அதிமுக சார்பாக எம் சந்திரஹாசன் போட்டியிடுகிறார், பாஜக சார்பாக கார்தியாயினி போட்டியிடுகிறார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.நாம் தமிழர் சார்பாக ஜான்சி ராணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சிதம்பரம் தனி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு 45% வெற்றி வாய்ப்பு என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சந்திரஹாசனுக்கு 27 % வெற்றி வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பாஜக வேட்பாளர் கார்த்தியாயினுக்கு 19% வெற்றி வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like