1. Home
  2. தமிழ்நாடு

இது எப்படி.. சூப்பர்ல..! சென்னையில் 12 மாடி கட்டிடத்துக்குள் மெட்ரோ ரயில் நிலையம்!

1

சென்னையில் நீலம் மற்றும் பச்சை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் திருமங்கலம், கோயம்பேடு, திருமயிலை ஆகிய மூன்று இடத்தில் ரயில் நிலையத்துடன் கட்டிடங்களை மேம்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதாவது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் திருமங்கலம் பகுதியில் ஒரு 12 மாடி கட்டிடத்தின் 3வது மாடியில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு, அதில் ரயில்கள் நின்று செல்லும் விதமாக ரயில் நிலையமும் அமைக்கப்பட உள்ளது.

ரயில் நிலையம் அமைக்கப்படும் பகுதியை மேம்படுத்தவும், அருகில் மக்கள் வசிப்பதை அதிகரிக்கும் விதமாகவும், ரயில் நிலையம் அமைப்பதைவிட, அடுக்குமாடி கட்டிடத்தில் ரயில் நிலையம் அமைத்து, மற்ற தளங்களை வாடகைக்கு விடுவது வருவாய்க்கும் சரியாக இருக்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி கோயம்பேடு, திருமயிலை பகுதிகளில் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் 12 மாடி கட்டிடத்தில் அமையும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பாதை உருவாக்கப்பட்டபோது அங்கு கட்டிடங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் விதமாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அந்தவகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 இடங்களில், அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு ஏதுவாக தற்போது திருமங்கலத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 3 வீடுகள் மட்டும் ரயில் பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டும் அமைப்பதைவிடவும் அடுக்குமாடி கட்டிடங்களை அமைத்து, அதனை வணிக நிறுவனங்களாக மாற்றினால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு செய்த செலவை ஈடு செய்ய முடியும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருதுவதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கு ஏதுவாக தற்போது திருமங்கலத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 3 வீடுகள் மட்டும் ரயில் பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டும் அமைப்பதைவிடவும் அடுக்குமாடி கட்டிடங்களை அமைத்து, அதனை வணிக நிறுவனங்களாக மாற்றினால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு செய்த செலவை ஈடு செய்ய முடியும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருதுவதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டம் குறித்து முன்னாள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இயக்குநர் ஆர்.ராமநாதன், “ரயில்கள் முழுவதுமாக இயங்கினாலும் பயண செலவு மற்றும் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு டிக்கெட் வருவாயை கொண்டு மட்டுமே சமாளிக்க முடியாது. விளம்பரங்களை வைப்பது, நிலையங்களில் சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிப்பது போன்றவை அதிக வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் சோங்கிங்கில் உள்ள 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் ஆறாவது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. நாக்பூரில் உள்ள ஜீரோமைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15-அடுக்கு நட்சத்திர ஹோட்டல் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like