ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை எப்படி உள்ளது ? வெளியான மருத்துவமனை அறிக்கை!
ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது 67 வயது ஆகும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் தகவல்படி, சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தற்போது நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அசிடிட்டி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ." என தெரிவிக்கப்பட்டுள்ளது.