1. Home
  2. தமிழ்நாடு

ஈஷா சத்குரு உடல்நிலை எப்படி இருக்கிறது? மகள் தந்த அப்டேட்

1

ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த 4 வாரங்களாக தலைவலி இருந்த நிலையிலும் மகா சிவராத்திரி விழா மற்றும் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்துகொண்டார். கடந்த 17-ம் தேதி தலைவலி அதிகரித்ததால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இடது காலும் பலம் இழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கூறுகையில், "நாங்கள் எங்கள் பங்கை செய்துவிட்டோம். எங்களின் எதிர்பார்ப்பை விட அவருடைய உடல் வேகமாக குணமடைந்து வருகிறது. இப்போது அவருடைய உடல் நிலை சீராக இருக்கிறது. மூளை வேமாக சரியாகி வருகிறது" என்று கூறியிருந்தார். இதனையடுத்து, ஜக்கி வாசுதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜக்கி வாசுதேவ் மகள் ராதே ஜக்கி, தனது தந்தையின் உடல் நலம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஜக்கி வாசுதேவின் படத்தை பகிர்ந்து, நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like