1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார்? : நடிகர் நாசர் தகவல்..!

1

உடல்நலக் குறைவு காரணமாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்பு தெரிவித்து இருந்தது. 
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் கண்ணீருடன் பிராத்தனை செய்து வந்தனர்  

இதனையடுத்து கேப்டன் உடல்நிலை தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விஜயகாந்த் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் பரிபூரண உடல் நலத்துடன் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். விரைவில் கேப்டன் நலமுடன் தங்களை சந்திக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சங்க தலைவர் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'கேப்டன் நலமுடன் இருக்கிறார். எல்லா உறுப்புகளும் செயல்படுகிறது. சில நாட்களாக வெளியான செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தியது தான். தலைமை மருத்துவரும் அவர் நல்லா இருப்பதாக கூறினார்.

யாரும் வதந்திகளை பரப்ப வண்டாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார் என தெரிவித்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like