1. Home
  2. தமிழ்நாடு

என்கவுன்டர் எப்படி நடந்தது..? இரானிய கொள்ளையர்களை பிடித்தது எப்படி..?

Q

இரானிய கொள்ளையர்களை பிடித்தது எப்படி, என்கவுன்டர் எப்படி நடந்தது என்பது குறித்து நிருபர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது; செயின் பறிப்பு சம்பவம் பற்றி எனது கவனத்திற்கு வந்த உடனே நகரம் முழுவதும் அலர்ட் செய்ய சொல்லி சோதனை நடத்த சொன்னோம். இதே போன்ற சம்பவங்கள், தாம்பரம் காவல் கமிஷனரகம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் வெளிமாநில கொள்ளையர்கள் அதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று எண்ணி, ஏர்போர்ட், ரயில் ஸ்டேஷன், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வாகன நிறுத்தம் பகுதிகளில் சோதனை செய்ய சொன்னோம்.
அதுபோல சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது சில குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது. அதை வைத்து சென்னை ஏர்போர்ட்டில் 2 பேரை பிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவல்படி சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் இருந்து ஓங்கோல் சென்ற அவனை ரயில்வே போலீஸ் உதவியுடன் பிடித்தோம்.
3 குற்றவாளிகளை பிடித்து நடந்த செயின்பறிப்பு சம்பவங்களில் பறிகொடுக்கப்பட்ட அத்தனை நகைகளையும் மீட்டுள்ளோம். சி.சி.டி.வி., காட்சிகளில் குற்றவாளிகள் ஓரளவுக்கு அடையாளம் தெரிந்தது. அதை ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகளுக்குச் சொல்லி சந்தேக நபர்கள் யாராவது கடைசி நிமிடத்தில் டிக்கெட் எடுத்து எங்கேயாவது போக முயற்சிக்கிறார்களா என்று கண்காணித்தோம்.
அதன் பின்னர், கிடைத்த தகவல்படி ஹைதராபாத் செல்லக்கூடிய ஒரு விமானத்தின் உள்ளே அந்த குற்றவாளி இருந்தான். உள்ளே உட்கார்ந்திருந்த அவனை, விமான நிறுவன அதிகாரிகளிடம் கூறி, அங்கேயே சென்று பிடித்தோம்.
குற்றச்செயலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட பைக்கை எடுக்க போகும்போது குற்றவாளி போலீசை தாக்கி தப்பிக்க பார்த்துள்ளான். அப்போது தான் என்கவுன்டர் நடந்தது. அந்த பைக்கில் குற்றவாளி துப்பாக்கி வைத்திருந்தான்.
இதுவரைக்கும் வந்த தகவல்களின் படி, மும்பை போலீசிடம் தகவல் பெற்றுள்ளோம். 50க்கும் மேற்பட்ட வழக்குகள் குற்றவாளி மீது இருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் வந்திருக்கிறது. தமிழக காவல்நிலையங்களில் அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும்.
3 பேரில் ஒருத்தன் சம்பவத்தை அரங்கேற்றும் முன்னதாக சில ஏற்பாடுகளை செய்கிறான். அவர்கள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்தது. அது திருடப்பட்டதா அல்லது அங்கேயே வாங்கப்பட்டதா என சோதனை செய்து வருகிறோம்.
2 பேர்களும் சம்பவம் நடக்கும் அன்றைய தினம் நள்ளிரவில் ஏர்போர்ட்டில் இறங்கி வருகின்றனர். அவர்களுக்காக ஏர்போர்ட்டில் 3வது குற்றவாளி வைத்திருக்கிற பைக்கை எடுத்துக் கொண்டு போகிறார்கள். இவர்கள் இந்தியாவில் எல்லா இடத்திலும் இயங்கக்கூடிய கிரிமினல் கும்பல்.
இவ்வாறு அருண் கூறினார்.

Trending News

Latest News

You May Like