மதுரை ரயிலில் தீ விபத்து நேர்ந்தது எப்படி? - விரிவான தகவல்..!

லக்னோவின் புனலூரில் இருந்து மதுரை வந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் 2 ரயில் பெட்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. காலை 05.15 மணிக்கு அந்த ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 05.20 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
காலை 07.15 மணியளவில் ரயிலில் பற்றிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ரயில் பெட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டது. தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்.சட்ட விரோதமாக சிலிண்டரில் பயணிகள் சமைக்க முயன்ற போது, தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரயில் விபத்தில் இதுவரை 5 ஆண்கள், 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரப்பூர்வமாக. அறிவித்துள்ளது.
ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை அருகே ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 93605-52608, 80156-81915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..