சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக எவ்வளவு ?
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்பு கிடுகிடுவென பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சென்னையில் மட்டுமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் , சென்னையின் மொத்த பாதிப்பு 47,650ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, ராயபுரத்தில் 6,951 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/UCWyODOSzW
— Greater Chennai Corporation (@chennaicorp) June 26, 2020
இதைத் தொடர்ந்து, தண்டையார் பேட்டையில் 5,717 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,534 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 5,216 பேருக்கும், அண்ணா நகரில் 5,260 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,981 பேருக்கும், அடையாறில் 2,922 பேருக்கும், வளசரவாக்கத்தில் 2,058 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Newstm.in