1. Home
  2. தமிழ்நாடு

தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்படி நண்பா..? வெளியான வீடியோ..!

1

 ‘லியோ’ திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது லியோ திரைப்படம். மேலும், கடந்த 7 நாட்களில் 500 கோடிக்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை வெற்றி விழா நடைபெற உள்ளது. போலீசார் அனுமதியுடனும் பாதுகாப்புடனும் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 

Trending News

Latest News

You May Like