டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொன்னால் எப்படி?.

நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நடிகர் என்பதால் வெளியில் தெரிகிறது. இதைப் பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் இதைவிட இதை மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், இதை விக்கிறார்கள் நல்லா ஜம்முனு இருக்காங்க.. இது பெரிய மாஃபியா கும்பல். பல லட்சம் கோடி சம்பாதித்து வருகிறார்கள். இப்போது இந்தியா முழுக்க அதிகமாகிக் கொண்டே போகிறது. கலாச்சார பூமியான நம் நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மிகப்பெரிய ஆபத்து. நமது நாட்டின் கலாச்சாரத்தையே அடியோடு பாதிக்கும். அப்பா, அம்மா என குடும்பம் குடும்பமாக இருக்கும் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலைமையே மாறிவிடும்.
இந்த போதைப் பொருளை யார் விற்கிறார்கள்.. இது பின்னாடி யார் இருக்கிறாங்க என்று நமக்கு தெரியாது.. ஆனால் ஒரு அரசாங்கம் நினைத்தால் இதை தடுக்க முடியும்.. ஒரு காவல்துறை நினைத்தால் இவர்களை பிடிக்க முடியும்.. இந்த அரசாங்கம் செயல்பட்டது.. செயல்படவில்லை என்பதையெல்லாம் தாண்டி.. தயவுசெய்து செயல்பட்டாக வேண்டிய பேராபத்தில் இருக்கிறோம் என்பது தான் உண்மை. இன்னும் ஒரு விஷயம் யோசிக்க வேண்டும்.. இந்த ஒரு போதையை மட்டும் தான் போதையாக நினைக்கிறோம்.. டாஸ்மாக் என்னது?.. தமிழ்நாடு முழுக்க என்ன சத்து டானிக்கா விற்று கொண்டிருக்கிறார்கள். அத வாங்கி குடித்தால் மட்டும் உடலுக்கு நல்லதா.. ஆம் அதுவும் ஓர் போதை தான்.. மூளைக்கு போகும் ஆக்சிஜனை இதுவும் கட் பண்ணும். அதுவும் கட் பண்ணும். அப்போ அதை மட்டும் நாம விற்கிறோம்.. புகைப்பிடிக்கிறோம்.. அந்த புகை முழுவதும் அப்படியே வெளியில் செல்கிறது. இதை எத்தனையோ பேர் சுவாசிக்கிறார்கள். இதனால் அதை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி பயன்படுத்தாதவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். இது முழுக்க முழுக்க வியாபார பொருட்களாக மாறி வருகிறது. இது ஒரு பேராபத்து. இது தான் போர் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு போர் நடக்கும் என்றால் இதனை நாம் தீவிரமாக கொள்ளவேண்டும். இதற்கு தயவு செய்து அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க முடியும்.. இது ரொம்ப வேதனையான விஷயம்..
நான் பார்டியில் பங்கேற்றது கிடையாது. அந்த பார்ட்டில் பங்கேற்ற எல்லாரும் போதைப் பொருள் பயன்படுத்தி இருக்காங்க என்றும் சொல்ல முடியாது. அதில் நிறைய பேர் பயன்படுத்தாமலும் இருக்கலாம்.. இப்போது இரண்டு நடிகர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்பதால் இனிமேல் பலரும் அதை பயன்படுத்தாமல் இருப்பாங்க.. போதைப்பொருளால் ஒருவர் வாழ்க்கையை இழந்துவிடுகிறார்.. குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு ஆனால் மாலையிலேயே அதை மீறிவிடுகிறார். எதாவது காரணம் சொல்லி மீண்டும் குடிக்கிறார்கள்.. பக்கத்திலேயே வச்சுக்கிட்டு குடிக்காம இருக்க முடியுமா. அதனால் சரக்கு இருக்குது என்றால்தானே இப்படி அவங்க குடிக்கிறாங்க.. கொரோனா டைமில் எப்படி இருந்தோம்.. பால் வரவில்லை என்றால், பிளாக் காஃபி குடித்து பழகினோம்.. காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கஞ்சி குடித்து இருந்தோம்.. அதைப்போலவே கிடைக்காமல் செய்தால் மட்டுமே போதை இல்லா வாழ்க்கை என்பது சாத்தியம். அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு நாமே, மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொன்னால் எப்படி?.. பக்கத்திலேயே வைத்துக்கொண்டு என்னால் எப்படி குடிக்காமல் இருக்க முடியும்.. அதை முழுவதுமாக வேர் அறுத்தால் மட்டுமே சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.