1. Home
  2. தமிழ்நாடு

1 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர் எப்படி? காயத்ரி ரகுராம் காட்டம்..!

1

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்த காயத்ரி ரகுராம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைதொடர்ந்து, காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மற்றும் கட்சி தலைவர் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 

நேற்று பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் போது அவருடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து 10.30 மணியளவில், சோமனூர் பேருந்து நிலையம் அருகே வந்த அண்ணாமலை, அங்கு இரவு 11.45 மணி வரையிலும் உரை நிகழ்த்தினார்.

இதன் பின்னர் கோவை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்திய அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் காரில் அமர்ந்தபடியே இரவு உணவை சாப்பிட்டனர். இந்த புகைப்படங்களை பாஜகவினர் தற்போது இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில், ₹1 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர். எப்படி? மாருதி 800 இல் ஏன் செல்லக்கூடாது? அது அவர்களின் (பாஜகவின்) தர்க்கம். அவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயி தானே, அவர்களின் பயணத்திற்கு மாருதி 800 ஐ கூட விரும்புவார் இல்லையா. 2.5 ஆண்டுகளுக்குள் எவ்வளவு விலை உயர்ந்த கார்? இந்த டுபாக்கூர் 420மலை இதில் கலைஞர் குடும்பத்தை ஊழல்வாதிகள் என்று கேலி செய்து அவர்களின் குடும்ப கார்கள் மீது கண் வைத்தனர். அசை யாரை தான் விட்டு வைத்தது. இதில் சிம்ப்ளிசிட்டி ஹேர்சிட்டி என்று அழைக்கிறார்கள், ஒரு காரணத்திற்காக 420.


 

Trending News

Latest News

You May Like