1. Home
  2. தமிழ்நாடு

அது எப்படி..? நடிகையை பிடிக்க 2 தனிப்படை...ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை இன்னும் பிடிக்க முடியலை..!

1

மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.

ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல்துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.

ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர். எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like