1. Home
  2. தமிழ்நாடு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்..!

1

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதே போல், லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு கப்பல்களை சிறைபிடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  கடந்த 12-ம் தேதி  ஏடன் வளைகுடாவில் செங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். 

நிலக்கரி ஏற்றி சென்ற அந்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியும், வெடிபொருட்களை ஏற்றிவந்த டிமோட் மூலம் இயங்கக் கூடிய படகுகளை மோதச்செய்தும் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் சரக்குக் கப்பலில் தீப்பற்றியது. உடனடியாக அவ்வழியாக சென்ற மற்றொரு சரக்கு கப்பலை சேர்ந்த ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளான சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். 

ஆனால், இந்த தாக்குதலில் ஒரே ஒரு மாலுமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, நிலக்கரியை ஏற்றி வந்த கப்பல் தாக்குதலில் பெரும் பாதிப்பை சந்தித்ததையடுத்து அது நடுக்கடலில் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் கைவிடப்பட்ட சரக்கு கப்பல் செங்கடலில் மூழ்கியது.  ஒரு வாரமாக செங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியுள்ளது.    

Trending News

Latest News

You May Like