முதியோருக்கு வீடு தேடி ரேசன்பொருள்: திட்டம் துவங்கியது..!
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள பயனாளியின் இல்லத்தில் ரேசன் பொருட்களை வழங்கி, திட்ட வாகனங்களின் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
.png)