இல்லத்தரசிகள் ஷாக்.. இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!

உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை இருந்ததால், அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தை அதிரடியாக வீழ்ச்சியை கண்டது.
கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முதலீட்டாளர்களால், பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டு, அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
ஆனால் கடந்த 6 நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டது. அதாவது 6 நாட்களில் தங்கம் விலை ரூ.2,680 குறைந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.68,480-ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் (நேற்று) தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65,800-ஆக குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.65,800க்கு விற்பனையான நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.66 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 102-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.