1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்.! கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு

1

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப்.6) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையானது.  கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி நேற்று முன்தின விலையில்(புதன்கிழமை) மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையானது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240

04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480

03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

Trending News

Latest News

You May Like