1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! ஒரே நாளில் சவரனுக்கு 480 ரூபாய் குறைவு..!

Q

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து, ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,759-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 49 ரூபாய் குறைந்து, ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் குறைந்து, ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
W

Trending News

Latest News

You May Like