1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! சவரனுக்கு 200 ரூபாய் குறைவு..!

1

தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்வது மிகமிக முக்கியமாகும். தங்கத்தின் விலை ஊருக்கு ஊர், கடைக்கு கடை மாறுபடும் வாய்ப்புள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.54,160-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,566-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.5,546-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 92,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.92,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like