1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! எகிறும் காய்கறி விலை..!

1

தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது விவசாயத்தை பெரிதும் பாதித்தது. உற்பத்தி குறைந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மொத்த சந்தைகளிலும் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் விலை அதிகரித்ததை தொடர்ந்து உள்ளூர் சந்தைகளில் விலை அதிகரித்தது.

அதன்படி பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கத்திரிக்காய், தக்காளி, கேரட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றம் ஆனது 2 முதல் 3 வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like