1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! உச்சத்தை தொட்ட காய்கறி விலை..!

Q

கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.
குறிப்பாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும், பீன்ஸ் 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதிகபட்சமாக முருங்கைக்காய் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த பல வாரங்களாகவே முருங்கைக்காய் விலை உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழையோடு, கடுமையான பனிப் பொழிவுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகப் பனி மற்றும் மழைக் காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும். மேலும், சபரிமலை ஐயப்பன் சீசன் முடிந்து, தைப்பூசம் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் பாதயார்த்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இந்தக் காலங்களில் இறைச்சி விலை வெகுவாகக் குறையும் அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 220 ரூபாயாகக் குறைந்து இருக்கிறது.
ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாகப் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு.
பனிப் பொழிவு மற்றும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாகப் பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீட்ரூட் 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும், கேரட் ₹80க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், இஞ்சி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தக்காளி விலை மட்டும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உருளைக்கிழங்கு 70 ரூபாய்க்கும், பூண்டு 380க்கும் விற்பனையாகிறது. அதிகபட்சமாகச் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த பல வாரங்களாகவே உச்சத்தில் இருக்கும் முருங்கை விலை அதே நிலையில் தொடர்கிறது.
அதிகபட்சமாக முருங்கைக்காய் ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இந்த விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை மட்டுமே.
இங்கு மொத்தமாகக் காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like