1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! திடீரென உயர்ந்த தக்காளியின் விலை..!

1

சென்னை கோயம்பேடு மார்க்கெட் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வரத்து அடைகின்றன. அந்த வகையில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக லாரி லாரியாக வந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். 

அந்த இரண்டு காய்களிகள் தான் சமையலுக்கு அடிப்படை தேவையாகும். இதன் காரணமாகவே மக்கள் விலையை பொறுத்து பை நிறையவோ அல்லது கை நிறையவோ வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோவுக்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது. மொத்த விலை கிலோ 35 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு கோயம்பேடு சந்தைக்கு 60 வண்டிகள் வரத்து தேவைப்படுகிறது. 15 வண்டிகள் குறைந்துள்ளது.இதன் காரணமாக தக்காளியின் விலை ஏற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending News

Latest News

You May Like