1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ரூ.100ஐ நெருங்கும் தக்காளி விலை..!

1

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தக்காளி விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குத் தக்காளி விலை கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தக்காளி விலை ரூ.100ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஏற்கனவே தக்காளி விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது.

கர்நாடகா மட்டுமன்றி ஆந்திராவிலும் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட விலை ஏறியுள்ளது. தக்காளி வரத்து குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். மதனப்பள்ளி, அனந்தப்பூர், சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தக்காளி பெருமளவு குறைந்த நிலையில், இதுவே தக்காளி விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது. தக்காளி வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி மட்டுமின்றி வெங்காய விலையும் அதிகரித்துள்ளது. நாட்டில் வெங்காய உற்பத்தியில் முக்கிய மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காய விலையும் உயர்ந்துள்ளது.இது மட்டுமின்றி இஞ்சி விலையும் ரூ.150ஐ தாண்டியுள்ளது. சிமிலிகுடா மற்றும் ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் இஞ்சி வரத்து குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். இதுபோல பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் உள்ளிட்ட சில காய்கறி விலை மட்டும் பெரியளவில் உயராமல் இருக்கிறது.

சென்னைக்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் இந்த இரு மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. இரு மாநிலங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளதால் சென்னையிலும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like