1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! விண்ணை முட்டும் அரிசி விலை...! ஒரு கிலோ 80 ரூபாய் வரை செல்லும் அபாயம்..!

1

தமிழகத்தில் வழக்கமாக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அரிசி விலை குறைந்திருக்கும். அதன் பிறகு அரிசி விலை கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் தொடங்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் அறுவடை மற்றும் நெல் வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் அரிசி விலை மீண்டும் குறையும்.

ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி மாதமும் மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 முதல் ரூ.200 வரை அரிசியின் விலை உர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை, பற்றாக்குறையான தண்ணீர், பூச்சித் தாக்குதலால் நெல் மகசூல் குறைந்துள்ளதால், அரிசியின் விலை கிலோவுக்கு சுமார் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு குறுவை பருவத்தின்போது போதிய தண்ணீர் இல்லாததால் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்.

அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. மேலும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அழுகின.

தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

பொதுவாக அரிசி கடைகளில் கடந்த சில மாதங்களாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்போது ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட அனைத்து ரக அரசிகளும் கிலோவிற்கு 15 முதல் 20 வரை உயர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து அரிசி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது..உதாரணமாக ஒரு கிலோ பிராண்ட் அரிசி ரூ.50-ல் இருந்து ரூ.60-65ஆகவும், ரூ.1100-க்கு விற்கப்பட்ட 26 கிலோமூட்டை தறஅபோது ரூ.1750-ஆகவும் உள்ளது. 

அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில்  ஹோட்டல்களில் இட்லி, தோசை, சாப்பாடு (meals), கலந்த சாதங்கள், பிரிஞ்சி, பிரியாணி உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like