1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! சதமடித்த வெங்காயம் விலை..!

1

நாடு முழுவதும் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை காய்கறி கடைகளில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது உச்சம் தொட்டுள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like