இல்லத்தரசிகள் ஷாக்..! நேற்று போலவே இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கிராம் 9,145 ரூபாய் என விலை குறைந்தது., புதன்கிழமை மேலும் விலை குறைந்து 9,100 ரூபாய் என விற்பனையானது. நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 9,105 ரூபாய் என மாறி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று போலவே இன்றும் சவரனுக்கு ₹40 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,110-க்கும், சவரன் ₹72,880-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹125-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.
