1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.3000 உயர்வு..!

Q

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

கடந்த 10ம் தேதி முதல் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் நிலவுகிறது.

ஜூன் 11ம் தேதி ஒரு சவரன் ரூ.72,160 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.3000 உயர்ந்து இருக்கிறது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை தங்கம் விலை போல் இன்று சற்று ஏற்றம் கண்டு ஒரு கிராம் ரூ.120.10 -க்கும், ஒரு கிலோ ரூ.1,20,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74360

12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640

08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

Trending News

Latest News

You May Like