1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை..!

1

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.6,850-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.6,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல் வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 96 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் 60 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 100.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சம்  100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை வரலாற்றில் முதல்முறையாக கிராம் ஒன்றுக்கு நூறு ரூபாய் என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 01 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை 81,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like