இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ரூ. 58,000 தொட்ட தங்கம் விலை..!
தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்து வந்த சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசில்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,260 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,920 -க்கும், ஒரு சவரன் ரூ. 63,260-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ. 100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,00,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.