இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு..!

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக மதிய நேரத்தில் மண்டையை பிளக்கும் படி அடிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம், இரவிலும் தென்படுவதால், மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாது நிலை உருவாகியுள்ளது.
இந்த வெயிலில் இருந்து தங்களை தற்காத்துகொள்ள பொதுமக்கள் சர்பத், இளநீர், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனையும் படுஜேராக நடைபெற்று வருகிறது.
சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சை பழம் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடைக்காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சை பழத்தின் விலை தற்போது விண்ணை தொடும் வகையில் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் எலுமிச்சை பழங்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ₹2,000 ₹2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை தற்போது ₹8,000க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பழத்தின் விலை ₹7 முதல் ₹10 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் மேலும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.