1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ஒரு கிராம் 6,500 ரூபாயாக உயர்வு..!

1

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் உயர்ந்து, ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து, ரூ.52,000-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,267-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 57 ரூபாய் உயர்ந்து, ரூ.5,324-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 82,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து, ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.84.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like