இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்வு..!
பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும்போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாகத் தெரி வித்தனர்.
மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையைக் கேட்டுப் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.
இதே போலக் கடலைப் பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆகக் கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.