1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது!

Q

ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜன.02) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.7,180க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,03) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராமுக்கு, 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு, ரூ. 1,200 உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
03/ஜனவரி/2025 - ரூ. 58,080
02/ஜனவரி/2025 - ரூ. 57,440
01/ஜனவரி/2025 - ரூ. 57,200
31/டிசம்பர்/2024 - ரூ. 56,880
30/டிசம்பர்/2024 - ரூ. 57,200
29/டிசம்பர்/2024 - ரூ. 57,080
28/டிசம்பர்/2024 - ரூ. 57,080
27/டிசம்பர்/2024 - ரூ. 57,200
26/டிசம்பர்/2024 - ரூ. 57,000
25/டிசம்பர்/2024 - ரூ. 56,800
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 100-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like