1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! இன்று முதல் நந்தினி பால் விலை அதிரடி உயர்வு..!

1

இந்தியாவில் அமுல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமாக நந்தினி திகழ்கிறது.கர்நாடகா மாநிலத்தில் பால் கூட்டுறவு நிறுவனமான KMF இருக்கிறது.KMF ஆனது கர்நாடகா அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

நந்தினி பிராண்ட்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 500 மில்லிலிட்டர் நந்தினி பாலின் விலை 22 ரூபாய், ஒரு லிட்டர் பால் 42 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் நந்தினி பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் 50 மில்லிலிட்டர் கூடுதலாக பால் சேர்க்கப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றமானது இன்று (ஜூன் 26) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அறிவிப்பின் மூலம் 550 மில்லிலிட்டர் பால் 22 ரூபாய், 1050 மில்லிலிட்டர் பால் 44 ரூபாய் என விற்பனை செய்யப்படவுள்ளது. 

இதுதொடர்பாக KMF எனப்படும் கர்நாடகா பால் கூட்டமைப்பு தரப்பு கூறுகையில், தற்போதைய அறுவடை காலத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால் அனைத்து மாவட்ட பால் சங்கங்களிலும் சேகரித்து வைக்கப்படும் பாலின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.சமீபத்திய நிலவரப்படி ஒரு கோடி லிட்டரை நெருங்கப் போவதாக தெரிய வந்துள்ளது. எனவே தான் ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் 50 மில்லிலிட்டர் பால் கூடுதலாக சேர்க்கப்பட்டு அதற்கு 2 ரூபாய் விலை ஏற்றத்தை வைத்திருக்கிறோம். இது அரை லிட்டர் (500 மி.லி) மற்றும் ஒரு லிட்டர் (1000 மி.லி) பால் பாக்கெட்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like