இல்லத்தரசிகள் ஷாக்..! நாளை முதல் பால் விலை உயர்கிறது..!
தமிழ்நாட்டின் முன்னணி பால் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் 'ஆரோக்யா' பால் மற்றும் தயிர் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளது.
நாளை (நவ.08) முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67ஆக உயர உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ தட்டுப்பாடோ இல்லாத சூழலில், தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஆரோக்யா பால், தயிர் விற்பனையை நாளை காலை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தபப்ட்ட பால் அரை லிட்டர் ரூ.31ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.