1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! இன்று முதல் பால் விலை உயர்வு!

1

சென்னை முதல் தென் மாவட்டங்கள்வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.

இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி நிறைகொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயிலிருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயிலிருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயிலிருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயிலிருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயிலிருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

Trending News

Latest News

You May Like