1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி...! தங்கம் விலை நேற்று குறைந்தது 120 ரூபாய் இன்று ஏறியது 200 ரூபாய்..!!

Q

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்க்கும் முதலீடாக தங்கம் உள்ளது. மேலும் தங்கத்தை வாங்கி வைப்பதன் மூலம் அவசர தேவைகளுக்கு தங்கத்தை விற்கவோ, அடகு வைக்கவோ உடனடியாக முடியும், இதுவே வீடு, நிலம், கார் என்று வாங்கும் போது மருத்து செலவு போன்ற அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பயன்படுத்த முடியாது.

அதே நேரத்தில் அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பின் பொருளாதார நடவடிக்கை காரணமாக தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அடுத்த 18 மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8500 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7,080 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 56ஆயிரத்து 840 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,105-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 97.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 97,900 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like