இல்லத்தரசிகள் ஷாக்..! குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..!

உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
கடந்த மாதம் தங்கம் விலை வரலாறு காணாத விலையை எட்டி, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மாதக் கடைசியில் கடந்த 8 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.
(ஜூலை 1) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,020க்கும், ஒரு சவரன் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜூலை 2) தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,065க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று (ஜூன் 3) சவரனுக்கு *320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,105, சவரன் ₹72,840-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 3 நாள்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.