இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

கடந்த 2 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது.கடந்த 2 நாட்களில் சவரன் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680