1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு..!

1

சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் ரூ.53,240 ஆக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 29) சவரனுக்கு ரூ.54,200 ஆக விற்பனையானது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.6,775க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இதுவரையில் இல்லாத அளவாக ரூ.102.20க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,200க்கு விற்பனையானது. இது நேற்று முன்தினம் விற்ற விலையை விட ரூ.1,200 அதிகமாகும்.

Trending News

Latest News

You May Like