1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! 10 நாட்களில் 2000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை... 7400 உயர்ந்த வெள்ளி விலை..!

1

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52.920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் 01 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை 81600க்கு விற்பனையான நிலையில் இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 89000க்கு விற்பனையாகிறது 

Trending News

Latest News

You May Like