இல்லத்தரசிகள் ஷாக்..! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!

தங்கம் விலை கொரோனா சமயத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இடையில் சில காலம் அதன் விலை ஏற்றம் சற்று குறைந்தது. மத்திய அரசும் கடந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்திருந்தது.
குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு தங்கம் விலை கணிசமாகவே குறைந்தது. இதனால் மக்கள் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கி வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.
இப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
கடந்த மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.