இல்லத்தரசிகள் ஷாக்..! தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு..!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது.
கடந்த சனிக்கிழமை (பிப்.15ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,890க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்.17ஆம் தேதி) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.