1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை..!

1

தங்கம் விலை மே 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. கடந்த புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 600 உயா்ந்து ரூ. 54,400-க்கும், ஒரு கிராம் ரூ. 75 உயா்ந்து ரூ. 6,800-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், தங்கத்தின் மீண்டும் வெள்ளிக்கிழமை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ. 54,720-க்கும், ஒரு கிராம் ரூ. 40 உயா்ந்து ரூ. 6,840-க்கும் விற்பனையானது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2.50 உயா்ந்து ரூ. 100.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2,500 உயா்ந்து ரூ. 1,00,500-க்கும் விற்பனையானது. வெள்ளி வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து ரூ.98-க்கு விற்பனை நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ.2.50 உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like