1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!

Q

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.70,160 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, 2 நாட்களுக்கு தங்கம் விலை சற்று குறைந்தது.

ஆனால், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.8,815-க்கும், ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,616, ஒரு பவுன் ரூ.76,928 ஆக இருந்தது.

இந்நிலையில், இப்போது புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது தங்கம் விலை. சென்னையில் இன்று (ஏப்.17) 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கும், ஒரு பவுன் விலை ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும் விற்கப்படுகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 உயர்ந்து ரூ.9,731 ஆகவும், பவுன் விலை ரூ.912 உயர்ந்து ரூ.77,848 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.10 லட்சம் ஆகவும் இருக்கிறது.

Trending News

Latest News

You May Like