1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஷாக்..! தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு..!

1

 பாரம்பரியமாக இந்தியர்கள் சேமிப்பிற்காகவும் அல்லது முக்கியமான பொருளாதார இலக்குகளை அடைவதற்காகவும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். எனவே தங்கம் வாங்குவது என்பது பொருளாதார ஆதரவு அமைப்பாகவே கருதப்படுகிறது.இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தங்கத்தை ஏதாவது ஒரு வடிவத்தில் நிச்சயமாக வைத்திருப்பார்கள்.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 53,680 ஆக இருந்த நிலையில் தற்போது அதாவது இன்று ஜூன் 6 ஒரு சவரன் விலை 54,400 ஆக உயர்ந்துள்ளது. வெறும் 5 நாட்களில் 720 ரூபாய் உயர்ந்துள்ளது.. சராசரியாக ஒரு நாளைக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது 

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து, ரூ.6,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.54,400-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 61 ரூபாய் உயர்ந்து, ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 96,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து, ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.98.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like