இல்லத்தரசிகள் ஷாக்..! மீண்டும் ரூ.7000த்தை தாண்டிய தங்கம் விலை..!
சென்னையில் நவம்பர் 19 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 56,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,065 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றும், இன்றும் மட்டும் ஒரு சவரன் ரூ.1040 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் ஏற தொடங்கி உள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில் (நவ.9 முதல் நவ.18 வரை) தங்கம் விலை நிலவரம் வருமாறு;
09/11/2024 - ரூ.58,200
10/11/2024 - ரூ.58,200
11/11/2024 - ரூ.57,760
12/11/2024 - ரூ.56,680
13/11/2024 - ரூ.56,360
14/11/2024 - ரூ.55,480
15/11/2024 - ரூ.55,560
16/11/2024 - ரூ.55,480
17/11/2024 - ரூ.55,480
18 /11/2024 - ரூ.55,960