இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைந்த தங்கம் விலை..!

தங்கத்தின் விலையில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிலவின. தங்கம் விலை ஏற்றம் கண்டதால் பெண்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந் நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. ஒரு கிராம் 90 ரூபாய் குறைந்து ரூ.8310க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்கப்படுகிறது.
Also Read - இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது..!
கடந்த 2 நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் ரூ.2000 வரை சரிவு காணப்பட்டுள்ளது. விலை சரிவை அறிந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை (ஏப்ரல் 01) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 8,510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 68,080 ரூபாய்க்கு விற்பனையானது.
புதன் கிழமை (ஏப்ரல் 02) தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்ப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 04) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு சவரன் ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,400க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்து உள்ளது