இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... தங்கம் விலை ஒரு சவரன் 1080 குறைந்தது..!
சென்னையில் நேற்று அதாவது நவம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 56,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 135 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,085 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்துள்ளது.