இல்லத்தரசிகள் குஷி..! ரூ.9 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை..!

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜூன் 25), தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் குறைந்து, 9,070 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் சரிவடைந்து, 72,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை.
இன்று (ஜூன் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,985க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.680 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880