1. Home
  2. தமிழ்நாடு

“ஹவுஸ் மேட்ஸ்”.."பீனிக்ஸ்".. எந்த ஓடிடியில் எப்போ பார்க்கலாம்?

1

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பீனிக்ஸ்'. இந்த படத்தின் மூலம் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார்.இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்திருந்தனர். ஆக்சன் கதைக் களத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பீனிக்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீனிக்ஸ் படம் டெண்ட்கொட்ட ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் பீனிக்ஸ் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்தது.இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 19ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like